தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செல்லிப்பட்டு அரசு பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு

செல்லிப்பட்டு அரசு பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு

செல்லிப்பட்டு அரசு பள்ளிக்கு சி.இ.ஓ., பாராட்டு


ADDED : மே 14, 2024 05:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 05:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: செல்லிப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் 2023 -24ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பள்ளி அளவில் மாணவி ராஜேஸ்வரி 469 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவன் ஸ்ரீ சிவனேஷ் குமார்-454 மாணவன் சுஜிதரன்-447, மதிப்பெண் பெற்று இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர். மேலும், 50 சதவீத மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், தேர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் அனிதா மற்றும் ஆசிரியர்களை முதன்மைக் கல்வி அதிகாரி தனசெல்வன் நேரு சால்வை அணிவித்துப் பாராட்டினார்.

இதில், ஆசிரியர்கள் பிரபாகரன், ராஜேஸ்வரி, அலுவலக ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us