/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தம்பதிக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி விஷவாயு தாக்கமா என அதிகாரிகள் ஆய்வு
/
தம்பதிக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி விஷவாயு தாக்கமா என அதிகாரிகள் ஆய்வு
தம்பதிக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி விஷவாயு தாக்கமா என அதிகாரிகள் ஆய்வு
தம்பதிக்கு மூச்சு திணறல்: மருத்துவமனையில் அனுமதி விஷவாயு தாக்கமா என அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 15, 2024 05:07 AM

புதுச்சேரி: குயவர்பாளையத்தில் கழிவறைக்கு சென்ற தம்பதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விஷவாயு தாக்கம் காரணமா என வருவாய்த்துறை, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், புதுநகரில் கழிவறையில் விஷவாயு தாக்கி சிறுமி உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அடங்குவதற்குள் நேற்று காலை நெல்லித்தோப்பு, சுந்தர மேஸ்திரி வீதியில் விஷவாயு கசிவதாக தகவல் பரவியது.
கடந்த 1 வாரமாக சுந்தர மேஸ்திரி வீதியில் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, மேன்ஹோல் வழியாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது.இத்தெருவில்பழனி, 62; அவரது மனைவி பவானி, 58; வசித்து வருகின்றனர். நேற்று காலை பவானி கழிவறைக்கு சென்றபோது, துர்நாற்றம் தாங்க முடியாமல் மயக்கம் வருவதாக கூறினார். பவானியை அழைத்து வர சென்ற பழனிக்கும் லேசான மயக்கம் ஏற்பட்டது. இருவரையும் உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, பரிசோதித்தபோது மூச்சு திணறல், கண் எரிச்சல், வாந்தி இருப்பது தெரியவந்தது.இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, நெல்லித்தோப்பு சுந்தர மேஸ்திரி வீதியில், வருவாய்த்துறை தாசில்தார் பிரத்திவி தலைமையிலான குழுவினர் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் ஆய்வு செய்தனர். அக்கம்பக்கத்தில் யாருக்கேனும் பாதிப்பு உள்ளதா எனவும், விஷவாயு கசிந்ததாக கூறப்படும் வீட்டிலும் ஆய்வு செய்தனர்.
பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் மேன்ஹோல்கள் திறந்து அடைப்புகள் சரிசெய்யும் பணி நடந்தது. இதற்கிடையே சுற்றுச்சூழல் துறை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் விஷவாயு கசிவு ஏதேனும் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மேன்ஹோல்களில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அனைத்தையும் திறந்து வைக்கப்பட்டது.