தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்

கிரைம் செய்திகள்


ADDED : ஜூன் 13, 2024 08:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2024 08:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயங்கி விழுந்தவர் பலி


திட்டக்குடி அடுத்த போத்திரமங்கலத்தை சேர்ந்தவர் பழமலை,55; இவர் நேற்று காலை அதேபகுதியில் நடந்த புதுமனை புகுவிழாவிற்கு தனது மாட்டை ஓட்டி சென்று குளிப்பாட்டியபோது மயங்கி விழுந்து இறந்தார். ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெண் போலீசுக்கு மிரட்டல்


காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் நேற்று பெண் போலீஸ் எழிலரசி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அலுவலக வளாகத்தில் போதையில் தகராறு செய்தவர்களை கண்டித்தார்.

அதில் ஆத்திரமடைந்த சக்திவேல் என்பவர், எழிலரசியை திட்டி தாக்க முயன்றார். இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆர்.ஐ.,யை மிரட்டிய வி.ஏ.ஓ.,


புவனகிரி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று பரங்கிப்பேட்டை குறு வட்டத்தை சேர்ந்தவர்களிடம் மனுக்கள் ஏற்பட்டது. அப்போது, பரங்கிப்பேட்டை பெண் வருவாய் ஆய்வாளருக்கும், சிலம்பிமங்கலம் வி.ஏ.ஓ., வுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளைரை ஒருமையில் திட்டி மிரட்டினார். இதனால், ஜமாபந்தியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us