/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடன் பிரச்னை: மீனவர் மீது தாக்குதல்
/
கடன் பிரச்னை: மீனவர் மீது தாக்குதல்
ADDED : ஜூன் 10, 2024 06:53 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கடனை திருப்பி தராத மீனவரை தாக்கிய இருவரை போலீசார் தேடிவருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், அனுமந்தை பகுதியை சேர்ந்தவர் சரவணன், 45; மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பாவா என்கிற சந்திரசேகரிடம் சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கியிருந்தார்.
சரவணன் வாங்கிய கடனை திரும்ப கொடுக்காமல், காலம் தாழ்த்தி வந்துள்ளார். கடந்த, 5ம் தேதி, சரவணன், புதுச்சேரி, தேங்காய்த்திட்டு துறைமுகத்திற்கு, வந்திருந்தார். அப்போது சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர் வி.கே பாளையத்தை சேர்ந்த, சுகுமார் ஆகியோர் சரவணனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சந்திரசேகர் மற்றும் சுகுமார் ஆகியோர், அருகில் இருந்த இரும்பு பைப்பை ஏடுத்து சரவணனை, சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சரவணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார், வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.