தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செட்டிப்பட்டு கோவிலில் தீமிதி உற்சவம்

செட்டிப்பட்டு கோவிலில் தீமிதி உற்சவம்

செட்டிப்பட்டு கோவிலில் தீமிதி உற்சவம்


ADDED : ஜூன் 12, 2024 02:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2024 02:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.

திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் திரவுபதியம்மன், முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், தீமிதி உற்சவம் கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 9ம் தேதி திரவுபதியம்மன், அர்ஜூனர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று மாலை 6:30 மணிக்கு நடந்தது.

திரளான பக்தர்கள் தீ மிதித்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us