/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் அமைச்சர் - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம் சட்டசபையில் கடும் அமளி
/
சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் அமைச்சர் - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம் சட்டசபையில் கடும் அமளி
சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் அமைச்சர் - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம் சட்டசபையில் கடும் அமளி
சிவப்பு ரேஷன் கார்டு விவகாரம் அமைச்சர் - எம்.எல்.ஏ.,க்கள் வாக்குவாதம் சட்டசபையில் கடும் அமளி
ADDED : ஆக 07, 2024 05:32 AM
புதுச்சேரி, : சிவப்பு ரேஷன் கார்டுகள் தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டால் பா.ஜ., அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பி.ஆர்.சிவா: குடிமைப்பொருள் வழங்கல் துறையில் தகுதி இல்லாதவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
சாய்சரவணன்குமார்: இதனை வன்மையாக கண்டிக்கிறேன். தகுதியானவர்களுக்கு தான் சிவப்பு ரேஷன் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது. என் மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக குற்றம் சாட்டுகின்றனர்.
நாஜிம்: புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.2.8 லட்சம் ஆக உயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொத்தமுள்ள 3.5 லட்சம் ரேஷன் கார்டில், 1.86 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டு, 1.67 லட்சம் மஞ்சள் ரேஷன் கார்டு உள்ளது. இதன்படி பார்த்தால் ஏழைகள் அதிகமாக உள்ளனர். இதில் எது உண்மை.
சாய்சரவணன் குமார்: இப்போது குற்றம்சாட்டும் பி.ஆர்.சிவா, தனது தொகுதிக்கு முதல்வர் மூலம் 600 ரேஷன் கார்டுகள் தனிப்பட்ட முறையில் வாங்கி சென்றுள்ளார். இதனை அவர் விளக்க முடியுமா. அவர்கள் எல்லோரும் தகுதியானவர்களா. மக்களுக்காக இரவு பகல் பாராமல் பணியாற்றிய அதிகாரிகள் மீது பழி போடுவதா.
பி.ஆர்.சிவா: உண்மையான ஏழைகளுக்கு சிவப்பு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. அதிகாரிகள் வைத்து ரேஷன் கார்டு வழங்குவதற்கு பதில், தன் அலுவலகத்தின் மூலம் தனி பணியாளர்கள் வைத்து ரேஷன் கார்டு வழங்கி வருகிறார்.
வைத்தியநாதன்: எனது தொகுதியில் உண்மையான ஏழைகள் கண்டறிந்து 500 பேருக்கு ரேஷன் கார்டு வாங்கி கொடுத்தேன். எனக்கு தெரியாமலே பலருக்கு ரேஷன் கார்டு கொடுத்துள்ளனர்.
சாய்சரவணன்குமார்: இப்போது குறை கூறுவோர், முறைகேடு என, அப்போது ஏன் புகார் தெரிவிக்கவில்லை. முறைகேடு நடந்திருந்தால் என்னிடம் புகார் தெரிவித்து இருக்கலாம். ரேஷன் கார்டு வழங்கியதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை.
தகுதியானவர்களுக்கு மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டு வழங்கியதாக கூறுவது என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி. ஆதாரத்துடன் புகார் அளித்தால் அந்த கார்டுகளை நீக்கலாம்.
அப்போது அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எழுந்து பேசியதால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.
சபாநாயகர் செல்வம்: இது தொடர்பாக உரிய ஆய்வு செய்து முதல்வர் பதில் அளிப்பார்.
அங்காளன்: ஒவ்வொரு தொகுதிக்கு ஒரு புரோக்கர் நியமித்து ரூ. 15 ஆயிரம் பெற்றுக் கொண்டு சிவப்பு ரேஷன் கார்டு கொடுத்தார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. வேண்டுமானால் சி.பி.ஐ., விசாரணைக்கு அமைச்சர் தயாரா.
நாஜிம்: சமூக பொருளாதார தணிக்கை நடத்தி, தகுதி இல்லாத ரேஷன் கார்டுகளை நீக்க வேண்டும். இதற்கு இது தான் தீர்வு.
சபாநாயகர் செல்வம்: தகுதியில்லாதவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக முதல்வர் கருதுகிறார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என கூறியதுடன் விவாதம் முடிவுக்கு வந்தது.