/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
மத்திய அரசை கண்டித்து தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 05:02 AM

புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசினை கண்டித்து புதுச்சேரி தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத், எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
தலைமைச் செயற்குழு உறுப்பினர் மூர்த்தி வரவேற் றார். கொள்கைப் பரப்புச் செயலாளர் சபாபதி மோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.தொடர்ந்து மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டதை கண்டிக்கின்ற வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் சண்குமரவேல், லோகையன், ஆறுமுகம், காந்தி, அருட்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், ராமசாமி, செல்வநாதன், சக்திவேல், தங்கவேலு, வேலவன், சண்முகம், தர்மராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.