/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 25, 2024 05:32 AM

திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம், போக்சோ மற்றும் கல்வி மேம்பாட்டு திறன் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
புதிதாக அமலுக்கு வந்துள்ள சட்டப் பிரிவுகள் குறித்தும் மாணவ, மாணவியருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டினர். சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், உதவி சப் இன்ஸ்பெக்டர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.