தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போக்சோவில் தந்தை கைது

போக்சோவில் தந்தை கைது

போக்சோவில் தந்தை கைது


ADDED : ஜூன் 18, 2026 10:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 10:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போக்சோ வழக்கில் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நகர பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் ஆட்டோ டிரைவர். இவர்களுக்கு 14 மற்றும் 8 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்று திரும்பிய பெண் தனது 14 வயது மகள் சோர்வுடன் இருப்பதைக் கண்டு விசாரித்தார்.

அப்போது, அச்சிறுமி, தனது தந்தை தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதை தனது தாயிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து, ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். அதையடுத்து, போலீசார் விசாரணையில் தந்தையே தனது மகளை கடந்த சில ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us