/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை இலவச கல்லீரல் முகாம்
/
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை இலவச கல்லீரல் முகாம்
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை இலவச கல்லீரல் முகாம்
வெஸ்ட்மெட் மருத்துவமனையில் நாளை இலவச கல்லீரல் முகாம்
ADDED : ஜூன் 15, 2024 05:16 AM
புதுச்சேரி: வெஸ்ட்மெட் மருத்துவ மனையில் இலவச கல்லீரல் முகாம் நாளை நடக்கிறது.
புதுச்சேரி இ.சி.ஆர்., சாலை, லாஸ்பேட்டை யில் வெஸ்ட்மெட் மருத்துவமனை இயங்கி வருகிறது. இம் மருத்துவமனையில் நாளை 16ம் தேதி இலவச கல்லீரல் முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
கல்லீரல் நோய் தொடர்பான பிரச்னைகளுக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரமேஷ்குமார் ஆலோசனை வழங்குகிறார்.
முகாமில், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், கல்லீரல் கொழுப்பு, சர்க்கரை வியாதி நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள், மது குடிப்பவர்கள், ஹெப்பாடிட்டீஸ் நோய் உள்ளவர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.
முகாமில் பங்கேற்பவர்களுக்கு சிறப்பு சலுகையாக பைபுரோஸ்கேன் எடுக்க 200 ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், 9597359111, 0413 - 2255566 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும்.