ADDED : ஜூன் 09, 2024 03:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : வேலைக்கு சென்ற கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் செய்தார்.
புதுச்சேரி ஆலங்குப்பம், அன்னை நகரை சேர்ந்தவர் அன்பு, 46; கொத்தனார்.
கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து தனது பைக்கில் வேலைக்கு சென்றார். மாலை வரை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில், டி.நகர், போலீசார் வழக்குப் பதிந்து, அவரை தேடி வருகின்றனர்.