/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நமச்சிவாயம் தோல்விக்கு உள்துறை பதவி காரணமா?
/
நமச்சிவாயம் தோல்விக்கு உள்துறை பதவி காரணமா?
ADDED : ஜூன் 09, 2024 02:51 AM
புதுச்சேரி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலில் ஆளும் கட்சியான என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசில் அமைச்சர், எம்.எல்.ஏ.கள் மற்றும் பா.ஜ., ஆதரவு எம்.எல்.ஏ.கள் என மொத்தம் 22 பேர் உள்ளனர். கையில் 22 தொகுதிகள் இருப்பதால், எளிதாக வெற்றி பெற்று விடலாம், 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என பா.ஜ., கணக்கு போட்டது. ஆனால் தேர்தல் முடிவு தலைகீழாக மாறியது. ஆளும் பா.ஜ., வேட்பாளர் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை தழுவினார். 2வது முறையாக போட்டியிட்ட வைத்திலிங்கம் மீண்டும் எம்.பி.யாக தேர்வானார்.
ஆளும் கட்சி, தாராள விட்டமின், அரசு இயந்திரம் இப்படி ஏராளமான சாதகமான அம்சங்கள் இருந்தும் நமச்சிவாயம் எப்படி தோற்றார் என அரசியல் கட்சிகள் யோசிக்க துவங்கி விட்டனர். பா.ஜ., தோல்விக்கு பல காரணங்கள் கூறினாலும், பழைய காரணம் ஒன்று உள்ளது என தகவல் பரவி வருகிறது.
புதுச்சேரி அரசியலில் உள்துறையை எப்போதும் முதல்வர் கைவசம் இருக்கும். உள்துறையை தனியாக பெற்று பொறுப்பு வகிக்கும் அரசியல் தலைவர்கள் அடுத்த தேர்தலில்களில் தோல்வியே தழுவி உள்ளனர்.
கடந்த காலத்தில் கண்ணன், பெத்தபெருமாள், வல்சராஜ் உள்துறை தனி அமைச்சராக பதவி வகித்தனர். அதன்பிறகு நடந்த தேர்தல்களில் இந்த மூவராலும் வெற்றி பெற முடியவில்லை. தற்போது நமச்சிவாயம் உள்துறை அமைச்சராக உள்ளார். உள்துறையை பதவி வகித்து கொண்டு போட்டியிட்டதால், நமச்சிவாயம் தோல்வியை தழுவியதாக ஒரு தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.