தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடைசி இடம் பிடித்த காரைக்கால் மாவட்டம்

கடைசி இடம் பிடித்த காரைக்கால் மாவட்டம்

கடைசி இடம் பிடித்த காரைக்கால் மாவட்டம்


ADDED : மே 07, 2024 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தமிழகம் புதுச்சேரி மாவட்ட அளவிலான பிளஸ் 2 தேர்ச்சி சதவீத பட்டியலில், காரைக்கால் மாவட்டம் 87.03 சதவீத தேர்ச்சியுடன், கடைசி 40 வது இடம் பிடித்துள்ளது.

தமிழகம் புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் மாவட்டம் வாரியாக தேர்ச்சி சதவீதம் வெளியிடப்பட்டது. தமிழகம் 38 மாவட்டமாகவும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் தலா ஒரு மாவட்டமாக மொத்தம் 40 மாவட்டங்களாக பிரித்து தேர்ச்சி சதவீதம் அறிவிக்கப்பட்டது.

காரைக்கால் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீத பட்டியலில் 87.03 சதவீத தேர்ச்சியுடன், கடைசி 40 வது இடத்தை பிடித்துள்ளது.

காரைக்காலில் 11 அரசு பள்ளிகள், 17 தனியார் பள்ளிகள் உள்ளது. இதில், அரசு பள்ளியில் பயின்று தேர்வு எழுதிய 1346 பேரில் 1099 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 81.65 ஆக உள்ளது. தனியார் பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய 805 பேரில், 773 பேர் தேர்ச்சி பெற்று 96.02 தேர்ச்சி சதவீதம் பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us