/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை
/
காரைக்கால் சிறையில் ஆயுள் கைதி தற்கொலை
ADDED : ஜூன் 10, 2024 01:33 AM

காரைக்கால்: காரைக்கால் சிறையில் ஆயுள் கைதி துாக்கு போட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வில்லியனுார் பொறையூர்பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி மகன் பிரதீஷ்,22; இவர், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி அடிதடி, வழக்கில் கைதானார்.
இவர் காதலித்து வந்த ராஜஸ்ரீ என்ற பெண், வேறு நபருடன் பழகினார். அதில், ஆத்திரமடைந்த பிரதீஷ், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 20ம் தேதி ராஜஸ்ரீயிடம் பேச வேண்டும் எனக்கூறி பொறையூர் சுடுகாட்டிற்கு அழைத்து சென்று அடித்து கொலை செய்தார்.
இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பிரதீஷ், காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு, அவரை சக கைதிகள் தாக்கியதை தொடர்ந்து காரைக்கால் சிறைக்கு மாற்றப்பட்டார். தனி சிறையில் இருந்த பிரதீஷ், நேற்று காலை துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த காரைக்கால் போலீசார், பிரதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார்
திண்டுக்கல் மாவட்டம், பழநி அடிவாரத்தை சேர்ந்தவர் முத்துசாமி,48; கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், கடந்த 8.10.2013 முதல் கடலுார் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
இவர், கடந்த 7ம் தேதி வாந்தி எடுத்து திடீரென மயங்கி விழுந்தார். அவரை சிறைக்காவலர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.