/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குறைந்த விலையில் 'லேப்டாப்' போலீஸ் விசாரணை
/
குறைந்த விலையில் 'லேப்டாப்' போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 09, 2024 03:58 AM
புதுச்சேரி, : புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் லேப் டாப் வாங்குவதற்கு ஆன்லைனில் தேடியுள்ளார். அவர் 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லேப் டாப் வாங்க ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி ஆர்டர் செய்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், அவருக்கு கொரியர் மூலம் லேப் டாப் வந்தது. அதனை பிரித்து பார்த்த போது, 15 ஆயிரம் மதிப்புள்ள லேப் டாப் வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த அவர், அமேசான் நிறுவன கஸ்டமர் கேர் எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டார். அப்படி இருக்காது, எனவும், சரியாக பதில் அளிக்கததால், அவர் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். மேலும், இதுபோன்று பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூடிப் மூலம் வரும் போலியான தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், நம்பகமான நிறுவனங்கள் மூலம் பொருட்களை ஆர்டர் செய்ய சைபர் கிரைம் எஸ்.பி., கலைவாணன் அறிவுறுத்தினார்.