/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலேரியா விழிப்புணர்வு ஓவியப்போட்டி பரிசளிப்பு
/
மலேரியா விழிப்புணர்வு ஓவியப்போட்டி பரிசளிப்பு
ADDED : ஜூன் 28, 2024 06:19 AM

புதுச்சேரி: தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மலேரியா எதிர்ப்பு விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடந்தது.
ஆண்டியார்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவ அதிகாரி மீனு தலைமை தாங்கி, மலேரியா நோய் பரவும் முறை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து பேசினார். ஆசிரியர் அருணாச்சலம் வரவேற்றார்.
பொறுப்பாசிரியர் அமலி, ஆசிரியர் தமிழரசி, சுகாதார உதவி ஆய்வாளர் ஜவகர், செவிலியர் மேற்பார்வையாளர் பவுனம்மாள், ஆஷா பணியாளர் ஏழைமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, பள்ளி மாண வர்கள் இடையே மலேரியா நோய் மற்றும் தடுக்கும் முறை குறித்த விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியர் மன்னாதன் நன்றி கூறினார்.