தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்

குளவிகள் கொட்டி சிகிச்சை பெற்ற கொத்தனார் இறந்தார்


ADDED : ஜூன் 05, 2024 03:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2024 03:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: குளவிகள் கொட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் வேலு, 49; கொத்தனார். இவர் மனைவி இறந்ததில் இருந்து அதிகமாக மது குடித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2ம் தேதி வீட்டு அருகில் உள்ள ஒரு மரத்தில் கழி மூலமாக கொடுக்கப்புளி பறித்தார். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ குளவிகள் அவரை சூழ்ந்து கொடியுள்ளது.

வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள், அழைத்து சென்று, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இறந்தார்.

இது குறித்து, அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us