/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் துறையில் இளநிலை பொறியாளர் பணிக்கான அறிவிப்பு திடீர் ரத்து
/
மின் துறையில் இளநிலை பொறியாளர் பணிக்கான அறிவிப்பு திடீர் ரத்து
மின் துறையில் இளநிலை பொறியாளர் பணிக்கான அறிவிப்பு திடீர் ரத்து
மின் துறையில் இளநிலை பொறியாளர் பணிக்கான அறிவிப்பு திடீர் ரத்து
ADDED : ஜூன் 09, 2024 02:47 AM
மின் துறையில் கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட 42 இளநிலை பொறியாளர் பணிக்கான அறிவிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மின்துறையில் காலியாக உள்ள 42 இளநிலை பொறியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த 42 இளநிலை பொறியாளர் பணியிடங்களும், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பொதுப்பிரிவினர்- 17, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் -4 , இதர பிற்படுத்தப்பட்டோர் -14, தாழ்த்தப்பட்டோர்- 7 என்ற இட ஒதுக்கீடு அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டது.
மேலும், இவர்களுக்கு மாதம் ரூ. 33 ஆயிரம் சம்பளமாக கிடைக்கும் என்றும், இப்பணிக்கு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். டிப்ளமோ படிப்பில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படித்து 3 ஆண்டு அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு எப்போது நேர்காணல் நடக்கும் விண்ணப்பித்துள்ள இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட இளநிலை பொறியாளர் பணியாளர் தேர்வு அறிவிப்னை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
காரணம் என்ன?
மின் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மின் துறையில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் காலியிடங்களை நிரப்ப முடிவு செய்து, கடந்த 2022ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டாலும், அது ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. ஒப்பந்தம் முடிந்த பிறகு இளநிலை பொறியாளர் கழற்றிவிடபடுவர். இதனால் புதிதாக தேர்வு செய்யப்படும் இளநிலை பொறியாளர்களுக்கு பணி பாதுகாப்பு இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் ஒப்பந்தத்திற்கு காலக்கெடு நீட்டித்தால் மட்டுமே அவர்கள், பணியில் தொடர்ந்து நீடித்து இருக்க முடியும்.
எனவே முறையில் இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்பும் முடிவினை தற்போது அரசு கைவிட்டுள்ளது. அதன் காரணமாக 2022ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இளநிலை பொறியாளர் பணி அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
விரைவில் புதிதாக இளநிலை பொறியாளர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்படும். முழுக்க அரசு ஊழியர்களாகவே இளநிலை பொறியாளர் தேர்வு செய்யப்படுவர். 42 பணியிடங்கள் மட்டுமின்றி கூடுதலாகவே இளநிலை பொறியாளர் தேர்வு செய்யப்படுவர்' என்றனர்.