ADDED : மார் 13, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி பென்ஷனர் சங்கத்தினர் கோரிக்கைகள் வலியுறுத்தி பேரணி சென்றனர்.
சங்க கவுரவ தலைவர் நடராஜன், தலைவர் சண்முகம், பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மின்துறை ஓய்வூதியர்கள் சங்க பொறுப்பாளர் மணி, போலீஸ் ஓய்வூதியர்கள் சங்க பொறுப்பாளர் சேகர் தலைமையில் பென்ஷனர்கள் முதல்வரிடம் மனு அளிக்க ஊர்வலமாக சென்றனர்.
அவ்ரகளை, சட்டசபை அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.பின்னர் சங்க நிர்வாகிகள், முதல்வரின் தனி செயலரிடம் மனு அளித்தனர்.