ADDED : ஏப் 23, 2024 04:07 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம் : பண்டசோழநல்லுார் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் பிரேதாஷ சிறப்பு வழிபாடு நடந்தது.
நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 9.00 மணிக்கு மூலவருக்குசிறப்பு அபி ேஷக ஆராதனைகள் நடந்தது.
மாலை 6.00 மணிக்கு நந்தியம் பெருமான் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடந்தது.
