/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின்துறை அதிகாரிகளுடன் பிரகாஷ்குமார் ஆலோசனை
/
மின்துறை அதிகாரிகளுடன் பிரகாஷ்குமார் ஆலோசனை
ADDED : ஜூன் 26, 2024 07:38 AM

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை தொகுதியில் நிலவும் மின்சாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக, அதிகாரிகளுடன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆலோசனை நடத்தினார்.
முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., பிரகாஷ்குமார், மின்துறை கண்காணிப்பு பொறியாளர் கனியமுதனை மின்துறை அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்து பேசினார். அப்போது, முத்தியால்பேட்டை தொகுதியில் மின்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அங்காளம்மன் நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் குறைந்த மின்னழுத்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவ வேண்டும், திருவள்ளுவர் நகர் செபஸ்தியார் கோவில் வீதி, கங்கை அம்மன் கோவில் வீதி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால், அங்கும் புதியதாக டிரான்ஸ்பார்மர் வைக்க வேண்டும் என பிரகாஷ்குமார் வலியுறுத்தினார்.
அங்காளம்மன் நகர் பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க புதியதாக 14 மின்கம்பங்கள் அமைக்க வேண்டும், சோலை நகர் வடக்கு சுனாமி குடியிருப்பு பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும்.
வேலாயுதம் பிள்ளை வீதி மற்றும் பட்டினத்தார் தோட்டம் பகுதியில் பழுதடைந்த புதைவட கேபிள்களை உடனடியாக மாற்றி சரி செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
இதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். உதவி பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் குமார் உடனிருந்தனர்.