/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., தலைவரை மாற்ற வலியுறுத்தி கட்சி அலுவலகத்தில் மாநில நிர்வாகி உண்ணாவிரதம்

ADDED : ஜூன் 15, 2024 04:48 AM

புதுச்சேரி: லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று புதுச்சேரி மாநில தலைவர் செல்வகணபதியை மாற்றக்கோரி, மாநில செயலாளர் அரை நிர்வாணமாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பாஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயம் தோல்வி அடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த புதுச்சேரி மாநில பாஜ., தோல்விக்கான காரணத்தை நிர்வாகிகள் மற்றும் ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ.,க்களிடம் கருத்து கேட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று காலை புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடியில் உள்ள பாஜ., தலைமை அலுவலகத்திற்கு காலை 10:00 மணிக்கு வந்த மாநில செயலாளர் ரத்தினவேல், அங்குள்ள பாரத மாதா சிலையின் கீழ் அரை நிர்வாணமாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய கட்சி யினரிடம் லோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று மாநில தலைவர் செல்வகணபதி பதவி விலக வேண்டும்.
இல்லையென்றால் அவரை கட்சி தலைமை உடனடியாக நீக்க வேண்டும். 22 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஆளுங்கட்சி துணை யுடன் போட்டியிட்ட பாஜ., வேட்பாளர் தோல்வியடைந்தது குறித்து கட்சி தலைமை காரணத்தை கண்டறிய வேண்டும்.
இல்லையெனில் செல்வகணபதி மீது நடவடிக்கை எடுக்கும்வரை சட்டை அணியமாட்டேன்' என்றார்.
அவரிடம், புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் சுரானா மற்றும் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாலை 3:00 மணிக்கு தற்காலிகமாக உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினார். ஆனால், மேல் சட்டை அணியவில்லை.