தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

விரிவுரையாளர்களை நிரந்தரம் செய்ய ராமலிங்கம் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : ஆக 14, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2024 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : ஜீரோ நேரத்தில் நேற்று அவர் பேசியதாவது:

நமது மாநிலத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ்கள் 14ம் எப்.சி., காலம் முடிந்தும் ஓடுவது மிக வேதனையான விஷயம். இதனால், நோயாளிகளை ஏற்றி செல்லும்போது பழுது ஏற்பட்டு நிற்பது தொடர்கதையாகி விட்டது.

இந்த ஆம்புலன்ஸ்களில் 82 ஓட்டுனர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு பிற மாநிலங்களை போல ரூ.30 ஆயிரம் அளவுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.

பாரதிதாசன் மகன் மன்னர்மன்னனின் இலக்கிய தொண்டுகளை போற்றும் வகையில், லாஸ்பேட்டையில் உள்ள அரசு மகளிர் பொறியியல் கல்லுாரிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும். மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக்கில் பணியாற்றும் 40 விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் சாதி, இருப்பிட சான்றிதழ்களை அடிக்கடி கேட்கின்றனர். இவை 6 மாதத்துக்கு ஒரு முறை மாறப்போவது கிடையாது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us