/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெரியகாலாப்பட்டு கடைகளில் குட்கா பறிமுதல்
/
பெரியகாலாப்பட்டு கடைகளில் குட்கா பறிமுதல்
ADDED : ஜூன் 29, 2024 06:30 AM
புதுச்சேரி : பெரியகாலாப்பட்டு பகுதி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் கிருபாகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். பெரியகாலாப்பட்டு முருகன் கோவில் வீதியில் உள்ள கடையில் ஹான்ஸ், கூல் லீப், சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து, கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 5030 ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக, கடையின் உரிமையாளர் ஆனந்தகுமார், 32; மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், அதேப்பகுதியில் சந்தாகுமார், 52: என்பவரது கடையில் இருந்த ரூ.1,734 மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.