/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் போதை ஸ்டாம்ப் விற்பனை கேரளா, சேலம் வாலிபர்கள் 4 பேர் கைது ரூ. 25 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

ADDED : ஜூன் 30, 2024 06:47 AM

புதுச்சேரி : ஜிப்மர் அருகே போதை ஸ்டாம்ப், கஞ்சா ஆயில் விற்பனை செய்த, கேரளா மற்றும் சேலம் வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனை அருகே போதைப் பொருட்கள் விற்பதாக வந்த தகவலின் பேரில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ஜிப்மர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் நின்றிருந்த சேலம், எருமைப்பாளையம் கோவிந்தசாமி நகர் சங்கீத்குமார்,27; சேலம், கருப்பூர் முஸ்லீம் வீதி கீர்த்திவாசன், 22, ஆகியோரை பிடித்து சோதனையிட்டனர். அவர்கள் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், போதை ஸ்டாம்ப் விற்பனை செய்த கோரிமேடு அருகே தங்கியிருந்த கேரளா, பாலக்காடு, ஒட்டாம்பாளையம் ஹைடர்,30; கன்னுார், முகமது பாசில், 27; ஆகியோரையும் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த எல்.எஸ்.டி (லைசெர்ஜித் ஆசிட் டைதலமைடு) என்கிற போதை ஸ்டாம்ப் 1,600, கஞ்சா 250 கிராம், கஞ்சா ஆயில் 180 மி.லி., பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். போதை ஸ்டாம்ப் ஒவ்வொன்றும் 1,500 முதல் 5,000 ரூபாய் வரை விற்பனை செய்வர்.
கைது செய்யப்பட்ட நால்வரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
போலீசார் கூறுகையில், 'போதை ஸ்டாம்புகள் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. இந்த போதை ஸ்டாம்ப் மற்றும் கஞ்சா விற்பனை செய்த நால்வருடன் தொடர்புடைய மேலும் 4 பேரை தேடி வருகிறோம்' என்றனர்.