தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


ADDED : ஏப் 23, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2024 05:48 AM


Favourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி, : லாஸ்பேட்டை என்.சி.சி. முகாமில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி லாஸ்பேட்டை தேசிய மாணவர் படை (என்.சி.சி.) மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் கடந்த 18 ம் தேதி துவங்கியது. இதில் 3 கல்லுாரிகள், 10 பள்ளிகளைச் சேர்ந்த 225 மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு தினசரி நடைபயிற்சி, முகாம் அமைப்பு, ஆயுதங்கள் கையாளுதல், தடைகளை தாண்டி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

அதில் துப்பாக்கி சுடும் பயிற்சி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது. முகாமில் பங்கேற்றுள்ள என்.சி.சி., மாணவர்கள் ஆர்வமுடன் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த முகாம் வரும் 27ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us