/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வழிகாட்டி பெயர் பலகையில் தெரு பெயர் அழிப்பால் பரபரப்பு
/
வழிகாட்டி பெயர் பலகையில் தெரு பெயர் அழிப்பால் பரபரப்பு
வழிகாட்டி பெயர் பலகையில் தெரு பெயர் அழிப்பால் பரபரப்பு
வழிகாட்டி பெயர் பலகையில் தெரு பெயர் அழிப்பால் பரபரப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:12 AM

புவனகிரி : புவனகிரியில், வழிகாட்டி பெயர் பலகையில், தெரு பெயர் தார் பூசி அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி பேரூராட்சிக்ககுட்பட்ட வார்டு பகுதிகளில், வீதிகளின் பெயரை பதிவு செய்து வழிகாட்டி பலகைகள் சமீபத்தில், பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டது.
இதில், 10 வது வார்டில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பெயர் பலகையில் முகமதியர் தெரு என்ற பெயரை விஷமிகள் சிலர் தார்பூசி அழித்துள்ளனர்.இதுகுறித்த அப்பகுதியை சேர்ந்த சிலர், அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் சண்முகத்திடம் முறையிட்டனர்.
உடன் அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு காமராவில் பதிவாகிய காட்சியின் அடிப்படையில், அரசு சொத்தை சேதப்படுத்திய சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புவனகிரி பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புவனகிரி போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.