ADDED : ஏப் 16, 2024 05:35 AM
அ நிறம் | அளவு
காரைக்கால், : காரைக்காலில் திருமணம் ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
காரைக்கால் நிரவி மேலஓடுதுறை மேல தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,41; கூலி தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை இதனால் அளவுக்கு அதிகமாக மது அருந்திவந்ததால் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் அனைவரும் வெளியில் சென்ற நிலையில் திருமணமாகாத ஏக்கம் மற்றும் உடல்நிலை பாதிப்பால் மனமுடைந்த ராமச்சந்திரன்,வீட்டின் உத்திரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
புகாரின் பேரில் நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
