/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒர்க் ஷாப்பில் வேலை செய்த சிறுவன் மீட்பு
/
ஒர்க் ஷாப்பில் வேலை செய்த சிறுவன் மீட்பு
ADDED : ஜூன் 26, 2024 07:34 AM
புதுச்சேரி: புதுச்சேரி - கடலுார் சாலை, முதலியார்பேட்டையில் உள்ள சுபாஷ் இருசக்கர வாகனம் மெக்கானிக் ஒர்க் ஷாப் உள்ளது. இந்த கடையில் சிறுவன் ஒருவன் வேலை செய்வதை நேற்று 24ம் தேதி மதியம் 12:30 மணியளவில், புதுச்சேரி தொழிலாளர் துறையில் உதவி ஆய்வாளர் தமிழரசன் அவ்வழியாக சென்றபோது பார்த்தார். அந்த சிறுவனிடம் விசாரித்தார்.
அவர், 11 வயதுடைய சிறுவன் என தெரியவந்தது. அவரை மீட்டு அரியாங்குப்பம் பகுதியில் உள்ள குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து உதவி ஆய்வாளர் தமிழரசன் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தை தொழிலாளியை மெக்கானிக் கடையில் பணிக்கு அமரத்திய கடை உரிமையாளர் சுபாஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.