/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : புதுச்சேரியில் கடந்த இரண்டு மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் சூறை காற்றுடன் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு 10:00க்கு சூறை காற்றுடன் மழை பெய்தது. முதலியார்பேட்டை ஆலை வீதியில் இருந்த பெரிய மரம் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று சாய்ந்து கிடந்த மரத்தை அகற்றினர். மரம் சாய்ந்ததால், அவ்வழியாக போக்குரவரத்து பாதிக்கப்பட்டது.