/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., மனு
/
மத்திய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., மனு
மத்திய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., மனு
மத்திய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி., மனு
ADDED : ஜூன் 29, 2024 06:29 AM
புதுச்சேரி : கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 40 மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, வைத்திலிங்கம் எம்.பி., மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், புதுச்சேரி மாவட்டத்தில் கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் மூலம் இரண்டு பள்ளிகள் ஜிப்மர் வளாகத்திலும், புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திலும் இயங்கி வருகின்றன. இரண்டு பள்ளிகளும் இரண்டு ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதுச்சேரியில் உள்ள கே.வி., பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க, பொதுமக்கள் மத்தியில் கடும் போட்டி எழுந்துள்ளது.
கடந்த 2023--24ம் கல்வியாண்டு வரை, இரு பள்ளிகளும் முதல் வகுப்பின் ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர்களை அரசு நிர்ணயித்தபடி இடஒதுக்கீட்டுடன் சேர்க்கப்பட்டனர். இந்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் 32 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவதாகவும், இதனால் ஒவ்வொரு பள்ளியிலும் 48 மாணவர்கள் குறைந்துள்ளதாகவும் பல பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் இவ்விவகாரத்தில் தலையிட்டு பொதுமக்களின் நலன் கருதி ஒவ்வொரு பிரிவிலும் 40 மாணவர் சேர்க்கையை மீட்டெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.