/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் அலட்சியத்தால் 3 பேர் உயிரிழப்பு வைத்திலிங்கம் குற்றச்சாட்டு

ADDED : ஜூன் 15, 2024 05:11 AM
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியின் அலட்சியத்தால் மூன்று பேர் உயிரிழந்ததாக, வைத்திலிங்கம் எம்.பி., குற்றம் சாட்டி உள்ளார்.
அவர் கூறியதாவது:
முதல்வர் ரங்கசாமியின் அலட்சியத்தால், மூன்று பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதற்கு முதல்வர் பொறுப்பேற்று, பதில் கூற வேண்டும். புதுநகர் பகுதியில் போதிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
பாதாள சாக்கடை திட்டமே, கேள்விக்குறியுடன் இருக்கும் திட்டமாக உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சர் செயல்படுகிறாரா என, தெரியவில்லை.
முதல்வர் அறிவித்த நிவாரணம், பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது வரை சென்றடையவில்லை. இந்த அரசாங்கம் அறிவிப்பை மட்டுமே வெளியிடும். பாதிக்கப்பட்டவர்கள் கையில் நிவாரணத்தை ஒரு போதும் வழங்காது.
புதுச்சேரி நகரம் முழுதும் விஷ வாயு இருக்கும் என்ற பயத்தில் பொதுமக்கள் உள்ளனர். மின் துறையை தனியாரிடம் கொடுப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. மின் கட்டண உயர்வை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.