ADDED : ஆக 17, 2024 02:52 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பாக நேற்று அனுசரிக்கப்படடது.
இதனையொட்டி, புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.
துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் தேனீஜெயக்குமார், சாய்சரவணன் குமார், அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.





