/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மதுராந்தகம் சார் பதிவாளரின் கடலுார் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
/
மதுராந்தகம் சார் பதிவாளரின் கடலுார் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
மதுராந்தகம் சார் பதிவாளரின் கடலுார் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
மதுராந்தகம் சார் பதிவாளரின் கடலுார் வீட்டில் விஜிலென்ஸ் 'ரெய்டு'
ADDED : ஜூன் 08, 2024 06:17 AM

கடலுார் : மதுராந்தகம் சார் பதிவாளரின் கடலுார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, கணக்கில் வராத் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக சார் பதிவாளர் (பொறுப்பு) திலீப் பிரசாத்,40; உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கடலுார், பீச் ரோடு, என்.ஜி.ஓ., துரைராஜ் நகரில் வசித்து வரும் மதுராந்தகம் சார் பதிவாளர் (பொறுப்பு) திலீப் பிரசாத் வீட்டில் கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6:00 மணி முதல், மதியம் 2:30 மணி வரை சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.