/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 05, 2024 12:09 AM

புதுச்சேரி: விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், 245 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி விநாயகா மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரி பட்டமளிப்பு விழா, புதுச்சேரி ஆனந்தா திருமண மண்டபத்தில் நடந்தது. ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றி, விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். புதுச்சேரி பிரிவு கல்லுாரி இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார்.
இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி இயக்குனர் உதயசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 245 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
துறை வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 4 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.
விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் வழிகாட்டுதலில் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சந்துரு உள்ளிட்டோர் செய்தனர். பேராசிரியர் வளர்மதி நன்றி கூறினார்.