Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 7வது நாளாக போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 7வது நாளாக போராட்டம்

 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 7வது நாளாக போராட்டம்


ADDED : பிப் 19, 2026 05:10 AM

Follow on Google

ADDED : பிப் 19, 2026 05:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 7வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர்.

சுகாதாரத்துறையின் கீழ், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாமில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் 60 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் உயர்த்தப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடந்த 12ம் தேதி, வேலை நிறுத்தம் போராட்டத்தை துவக்கினர்.

இந்நிலையில், 7வது நாளாக புதுச்சேரி சுகாதாரத்துறை வளாகம் முன்பு நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், சங்க தலைவர் புருேஷாத்தமன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பிரபாகரன், பொருளாளர் லுார்துமரியநாதன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap