/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடியரசு தினத்தையொட்டி 2 நாள் கிராமிய கலை விழா
/
குடியரசு தினத்தையொட்டி 2 நாள் கிராமிய கலை விழா
ADDED : ஜன 26, 2024 05:27 AM
புதுச்சேரி : குடியரசு தினத்தையொட்டி, இரண்டு நாட்கள் கிராமிய கலை விழா நடக்கிறது.
கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள் செய்திக்குறிப்பு;
கலை பண்பாட்டுது்துறை சார்பில், கலைஞர்களை ஊக்குவிக்கவும், அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை பாதுகாத்திடவும் பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், குடியரசு தினத்தையொட்டி, இன்று 26ம் தேதி, நாளை 27ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் தப்பாட்டம், கரகம், மயிலாட்டம் உள்ளிட்ட கிராமிய கலை விழா, பாகூர், கரிக்கலாம்பாக்கம், சோரப்பட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது.
இன்று பாகூரில் மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை, விஜயன் மண்வாசம் குழுவினரின் மங்கள இசையும், தொடர்ந்து நாட்டுபுறப்பாடல், கரகம், தப்பாட்டம் நடக்கிறது.
அதே போல், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை கரிக்கலாம்பாக்கத்தில் மங்கள இசை, மயிலாட்டம், பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல்; சோரப்பட்டில் மங்கல இசை, நாட்டுப்புறப்பாடல், காளியாட்டம், பம்பை உடுக்கை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

