/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குண்டுவெடிப்பு வழக்கில் 2 கைதிகள் கைது
/
குண்டுவெடிப்பு வழக்கில் 2 கைதிகள் கைது
ADDED : செப் 19, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:புதுச்சேரி, வில்லியனுார், கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமரன், 43; பா.ஜ., நிர்வாகி. இவர், 2023 மார்ச் 26ம் தேதி வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு, கடந்தாண்டு ஏப்., 29ம் தேதி என்.ஐ.ஏ.,விற்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக, நேற்று காலாப்பட்டு சிறைக்கு சென்ற என்.ஐ.ஏ., அதிகாரிகள், செந்தில்குமரன் கொலை வழக்கில் கைதாகி உள்ள ரவுடி நித்தியானந்தம் உள்ளிட்ட 17 பேரிடம் தனித்தனியாக விசாரித்தனர். இதில் கார்த்தி, உதயகுமார் ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.