Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி பல்கலையில் 2.0 மரம் நடவு நிகழ்ச்சி

புதுச்சேரி பல்கலையில் 2.0 மரம் நடவு நிகழ்ச்சி

புதுச்சேரி பல்கலையில் 2.0 மரம் நடவு நிகழ்ச்சி


ADDED : ஆக 13, 2025 05:34 AM

Follow on Google

ADDED : ஆக 13, 2025 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் 'வளர்ந்த பாரதம் இளைஞர் இணைப்பு' மற்றும் 'அம்மாவின் பெயரில் ஒரு மரம்' என்ற பிரசார முகாம், 2.0 மரம் நடவு நிகழ்ச்சி நடைபெற்றது.

துணை வேந்தர் பிரகாஷ்பாபு, முதல் நாற்றை நட்டு துவக்கி வைத்தார். இங்கு, கற்பகம், மாம்பழம், சப்போட்டா, பலாப்பழம், கொய்யா, நெல்லிக்காய், நீலச்செடி உட்பட 65க்கும் மேற்பட்ட பல்வேறு பழம் தரும் மரங்கள் இந்த வளாகம் முழுதும் நடப்பட்டது.

நிகழ்ச்சியில், துணை வேந்தர் பிரகாஷ்பாபு பேசியதாவது:

மரங்கள் கார்பன் டயாக்சைடை உறிஞ்சி ஆக்சிஜனை வெளியிடுவதால் காற்றின் தரம் மேம்படுத்தி, காற்று மாசை பாதிக்காமல் மாணவர்கள், பணியாளர்கள் சுவாசிக்க ஆரோக்கியமான சூழலை உருவாக்குகிறது.

மரங்களின் நிழல் வெளி பகுதிகளிலும், கட்டடங்களை சுற்றிலும் வெப்பத்தை குறைக்கிறது. பறவைகள், பூச்சிகள், சிறு விலங்குகளுக்கு இயற்கை வாழ்விடமாக அமைந்து, உயிரி பல்வகைமைக்கு ஆதரவளித்து உள்ளூர் சூழல் செழிக்க உதவுவதாக தெரிவித்தார். துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap