/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரிக்கு 5 எலெக்ட்ரிக் பஸ்கள் வருகை தற்போது சார்ஜ் ஸ்டேஷனில் நிறுத்தி வைப்பு

ADDED : மே 27, 2025 07:12 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் விரைவில் 25 எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்படவுள்ள நிலையில், 5 எலெக்ட்ரிக் பஸ்கள் புதுச்சேரிக்கு வந்துள்ளன.
புதுச்சேரி மாநிலத்திலும் பொது இடங்களில் எலெக்ட்ரிக் பஸ்கள் 25 இயக்கப்பட உள்ளன. இந்த மின்சார பஸ்களுக்கு தேவையான சார்ஜ் ஸ்டேஷன் தாவரவியல் பூங்கா எதிரே உள்ள இடத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சார்ஜ் ஸ்டேஷன் வளாகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 5 எலெக்ட்ரிக் பஸ்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, இந்த மின்சார பஸ்கள் நகர பகுதியில் பல்வேறு புதிய வழித்தடங்களில் இயக்கப்படும். இதற்கான டிக்கெட் கட்டணம், அரசின் மானியம் இரண்டும் ஒரே கணக்கில் வரைவு வைக்கப்படும். அதன் பிறகு ஒரு கிலோ மீட்டருக்கு 60 ரூபாய் வீதம் கணக்கிட்டு எலெக்ட்ரிக் பஸ்களை இயக்கிய நிறுவனத்திற்கு அரசு செலுத்தும்.
இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் மொத்தம் 9 மீட்டர் நீளம் கொண்டது. 36 பேர் வரை அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த பஸ்கள் அனைத்து ஜி.பி.எஸ்., கண்காணிப்பில் கீழ் கொண்டுவரப்பட உள்ளது. பஸ்களை இயக்கவிட்டால் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.