/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
/
பெண்ணுக்கு மிரட்டல் வாலிபர் மீது வழக்கு
ADDED : ஜன 10, 2024 02:01 AM
புதுச்சேரி :  புதுச்சேரியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். கணவரை இழந்தவர். அப்பெண், உடல் நலம் பாதித்த மூதாட்டியை கவனிக்கும் வேலை செய்து வருகிறார்.
வினோபா நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் பிரகாஷ் என்பவர், அப்பெண்ணுக்கு உதவிகள் செய்து வந்தார். இதனால் பிரகாஷ் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதால் அப்பெண் பிரகாஷ் உடனான பழக்கத்தை நிறுத்தி கொண்டார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அப்பெண் குறித்து தவறான தகவல்களை அவரது உறவினர்கள் நண்பர்களிடம் பரப்பினார். அவரிடம், சென்று என்னுடன் உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், தன்னிடம் உள்ள ஆபாச படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார்.
புகாரின் பேரில், கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து பிரகாைஷ தேடி வருகின்றனர்.

