/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூரில் நந்திக்கு சிறப்பு அபி ேஷகம்
/
பாகூரில் நந்திக்கு சிறப்பு அபி ேஷகம்
ADDED : ஜன 17, 2024 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது.
இக்கோவிலில், மாட்டு பொங்கல் பண்டிகையையொட்டி, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள்பாலிக்கும் செல்வ நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தன.
தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு பால், தயிர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம் ஆகிய வற்றால் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

