ADDED : நவ 09, 2024 06:50 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி,: வேலைக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
வில்லியனுார் அடுத்த கரசூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் யுவலட்சுமி 21, இவர் வில்லியனுாரில் உள்ள தனியார் கல்லுாரியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில் சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
