தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா

அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா

அஹில்யாபாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா


ADDED : ஜூன் 01, 2025 04:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2025 04:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் அஹில்யா பாய் ஹோல்கர் 300வது பிறந்தநாள் விழா, மாநிலத் தலைவர் செல்வ கணபதி தலைமையில் நடந்தது.

அகமத் நகரிலுள்ள இச்சோண்டி கிராமத்தில் பிறந்தவர் அஹில்யாபாய் ஹோல்கர்.

இந்துார் அரசியாக முடிசூட்டப்பட்ட இவர், தன்னுடைய அரசை வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து காத்து, 30 ஆண்டுகள் முறையான நிர்வாகமும், நல்லதொரு ஆட்சியை நடத்தினார். இவர் இறந்த பிறகு துறவியாக கருதப்பட்டார்.

மத்திய அரசு அஹில்யாபாய் ஹோல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்துார் விமான நிலையத்திற்கு, தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையம் என, பெயர் சூட்டியுள்ளது.

இவரது 300வது பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநில பா.ஜ., சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தலைமை தாங்கி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் சாய் சரவணன்குமார், பொறுப்பாளர் சிவக்குமார், மாநில பொதுச் செயலாளர் மவுலிதேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us