/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அண்ணா திடல் கடைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
/
அண்ணா திடல் கடைகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
ADDED : மே 30, 2025 05:30 AM

புதுச்சேரி: அண்ணா திடலில் 86 கடைகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, சாவி வழங்கப்பட்டது.
புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட அண்ணாதிடல் மற்றும் அதனை சுற்றியுள்ள கடைகள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 12.5 கோடிக்கு மறு கட்டமைப்பு பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக லப்போர்த் வீதியில் உள்ள 20 கடைகளும், சின்னசுப்பராய பிள்ளை வீதியில் உள்ள 79 கடைகளும் கட்டி முடிக்கப்பட்டு, ஏற்கனவே அங்கு கடையை நடத்தி வந்த பழைய பயனாளிகளுக்கே ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஏற்கனவே 50 பயனாளிகளுக்கு கடை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 36 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த 86 பயனாளிகளுக்கு கடைக்கான சாவியை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கிார்.
நிகழ்ச்சியில், நேரு எம்.எல்.ஏ., உள்ளாட்சித் துறை இயக்குநர் சக்திவேல், புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் வருவாய் அதிகாரி பிரபாகரன், என்.ஆர்.காங்., பிரமுகர் வினோத் உடனிருந்தனர்.