/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
/
நியூ மாடர்ன் வித்யா மந்திர் பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 06, 2024 06:15 AM

புதுச்சேரி, : முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 24வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு, பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், தலைமை தாங்கி கடந்த கல்வியாண்டில் 10, 11, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் பாட வாரியாக மாணவர்கள் 100 மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், விடுப்பு எடுக்காமல் வருகை புரிந்த ஆசிரியர்கள், நீண்டகாலம் பணிபுரியும் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பள்ளி முதல்வர் கஸ்தூரி கிரிஷ்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். புதுச்சேரி தனியார் பள்ளி கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் குலசேகரன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் செய்திருந்தனர்.