/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அஷ்ட புஜ காளியம்மனுக்கு பால்குட அபிேஷகம்
/
அஷ்ட புஜ காளியம்மனுக்கு பால்குட அபிேஷகம்
ADDED : மே 13, 2025 05:40 AM

புதுச்சேரி : அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட புஜ மகா காளியம்மனுக்கு, பால்குடம் எடுத்து வந்து அபிேஷகம் செய்யப்பட்டது.
அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், நேற்று சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.
இவ்விழாவையொட்டி, கோவில் வளாத்தில் உள்ள அஷ்ட புஜ மகா காளியம்மனுக்கு பக்தர்களால் பால்குடம் எடுத்து வந்து, காலை 8:00 மணியளவில், அபிேஷகம் செய்யப்பட்டது. மதியம் 2:00 மணிக்கு காளியம்மனுக்கு நவகிரக ேஹாமம், திருக்கல்யாண ேஹாமம் நடந்தது. தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு அம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
அதனை அடுத்து, 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசத்தை தொடர்ந்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர்.