/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில்... அலங்கோலம்; வண்டி வண்டியாய் குப்பையை கொட்டி அட்டூழியம்
/
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில்... அலங்கோலம்; வண்டி வண்டியாய் குப்பையை கொட்டி அட்டூழியம்
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில்... அலங்கோலம்; வண்டி வண்டியாய் குப்பையை கொட்டி அட்டூழியம்
லாஸ்பேட்டைஹெலிபேடு மைதானத்தில்... அலங்கோலம்; வண்டி வண்டியாய் குப்பையை கொட்டி அட்டூழியம்
ADDED : ஜூன் 15, 2025 11:53 PM

புதுச்சேரி நகர பகுதியில், சொல்லிக்கொள்ளும்படி பெரிய மைதானம் இல்லை. ஒரே ஆறுதலாக, லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானம் மட்டுமே உள்ளது.இங்கு, தினமும் காலையிலும் மாலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வாக்கிங் செல்கின்றனர். உடற்பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மைதானத்தில் இரவு நேரத்தில் வாங்கிங் செல்வோர் நலம் கருதி, ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. ெஹலிபேடு மைதானத்தை மேம்படுத்தி இங்கு செயற்கை கடற்கரை கொண்டு வர கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., முயற்சி எடுத்து வருகிறார்.
புயலின்போது ஏராளமான மரங்கள் ெஹலிபேடு மைதானத்தில் முறிந்து விழுந்தன. மீண்டும் பசுமையை ஏற்படுத்தும் வகையில் ெஹலிபேடு மைதானத்தை சுற்றிலும்தினமலர் நாளிதழ் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
இது போன்ற சூழ்நிலையில் ஜனாதிபதி வருகையொட்டி, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் இருபுறம் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும்மரக்கிளைகளும் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டன.
ஆனால், அகற்றப்பட்ட இந்த குப்பை கூளங்கள் மற்றும் மரக்கிளைகளை, வாகனங்களில் எடுத்து சென்று லாஸ்பேட்டை ெஹலிமேடு மைதானத்தில் டன் கணக்கில் கொட்டி, குப்பைமேடாக மைதானத்தைஅலங்கோலப்படுத்தியுள்ளனர்.
குருமாம்பட்டில் குப்பை கிடங்கு இருக்கிறது. புதுச்சேரி முழுதும் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தான் கொட்டப்பட்டு வருகிறது. ஏர்போர்ட் சாலையில் அகற்றப்பட்ட குப்பை கூளங்களை குருமாம்பட்டிற்குஎடுத்து சென்று கொட்டி இருக்கலாம். ஆனால், விமான நிலையத்தின் அருகில் உள்ள ெஹலிபேடு மைதானத்தில் கொட்டி, குப்பை தொட்டியாக்கியுள்ளனர்.
குப்பைகள் குவிந்து இருக்கும் இடத்தில் பறவைகள் கூட்டம் கூட்டமாக பறக்கும். பறவைகளால் விமானங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் தான்ெஹலிபேடு மைதானத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று உழவர்கரை நகராட்சி பல இடங்களில் எச்சரிக்கை பலகைவைத்து இருக்கிறது.
விமான நிலையம் ஆணையம் குப்பைகளை கொட்ட அனுமதிப்பது இல்லை. விமானங்களின் பாதுகாப்பு கருதி தான் ஏற்கனவே கருவடிக்குப்பத்தில் இருந்த குப்பை கிடங்கு குருமாம்பட்டிற்கு மாற்றப்பட்டது.
அப்படி இருக்கும்போது விமானம் நிலையம் அருகே ெஹலிபேடு மைதானத்தில் குப்பை கொட்ட அனுமதித்த அதிகாரி யார். ெஹலிபேடு மைதானத்தை குப்பை கொட்டும் இடமாக மாற்ற பசுமை தீர்ப்பாயம், விமான நிலைய ஆணையம், உழவர்கரை நகராட்சியிடம்அனுமதி பெறப்பட்டதா?சட்டத்தை மீறி இங்கு குப்பை கொட்ட அனுமதி அளித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனடியாக ெஹலிபேடு மைதானத்தில் கொட்டப்பட்ட குப்பை கூளங்கள், மரக்கிளைகளை அகற்ற கவர்னர், முதல்வர் உத்தரவிட வேண்டும். அப்படியே ெஹலிபேடு மைதானத்தை பாழ்படுத்தும் செயலை தடுத்து நிறுத்துவதற்கான வழிகாட்டுதல் உத்தரவுகளை புதுச்சேரி அரசு பிறப்பிக்க வேண்டும். ெஹலிபேடு மைதானத்தை குப்பை மேடாக மாற்றுவது இதுவே முதலும் கடைசியுமாகஇருக்க வேண்டும்.