Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ADDED : மார் 11, 2026 04:57 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் புதுச்சேரி பிப்டிக் கழகம் இணைந்து, தொழில் முனைவோருக்கான 'பிராண்டிங் மற்றும் மார்க்கெட்டிங் குறித்த ஊக்கமளிக்கும் நிகழ்ச்சி தட்டாஞ்சாவடியில் மாவட்ட தொழில் மைய கருத்தரங்க கூடத்தில் நடந்தது.

புதுச்சேரி அரசின் தொழில் மற்றும் வர்த்தகம், தீயணைப்பு சேவை மற்றும் மதுவரி துறை செயலர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் ஜெயராமன், பெண் தொழில் முனைவோர்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினார்.

மீன்வளத்துறை துணை இயக்குனர் ஷாஜிமா, சிறு மற்றும் மகளிர் தொழில் முனைவோர்கள் சந்தையில் முன்னேற மதிப்புக் கூட்டல், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சந்தை தயார்நிலை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பேராசிரியர் சமித் குமார் சிறப்புரையாற்றினார். உணவு பாதுகாப்பு அலுவலர் ஓய்வு ரவிச்சந்திரன், உணவு பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் தயாரிப்பு லேபிளிங் தரநிலைகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுச்சேரியில் இருந்து 72 மகளிர் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us