/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் புதுச்சேரியில் காணொலி மூலம் காண ஏற்பாடு
/
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் புதுச்சேரியில் காணொலி மூலம் காண ஏற்பாடு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் புதுச்சேரியில் காணொலி மூலம் காண ஏற்பாடு
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகம் புதுச்சேரியில் காணொலி மூலம் காண ஏற்பாடு
ADDED : ஜன 10, 2024 11:02 PM
இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை
புதுச்சேரி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி,புதுச்சேரியில் உள்ள கோவில்களை சுத்தம் செய்யவும், பக்தர்கள் கானொலி மூலம் கும்பாபிஷேகத்தை காணவும் ஏற்பாடு செய்யுமாறு, இந்து சமய அறநிலையத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்து சமய நிறுவனங்கள் மற்றும் வக்பு துறை ஆணையர் சிவசங்கரன், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து கோவில் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை;
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள, குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து கோவில்களிலும் வரும் 14ம் தேதி முதல் உரிய முறையில் உழவாரப் பணி செய்ய வேண்டும். கோவில் உட்புறம், பிரகாரம், சுற்றுப்புறங்கள், சுவர்கள், துாண்கள் மற்றும் சிலைகளை உரிய வகையில் துாய்மைப்படுத்த வேண்டும்.
அவ்வாறு துாய்மை செய்யப்பட்ட கோவில் பிரகாரங்கள், சுவாமி சிலைகளின் புகைப்படங்களை 'வாட்ஸ் ஆப்' மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
வரும் 22ம் தேதி நடக்க உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷக நிகழ்ச்சியை, பக்தர்கள் அனைவரும் காணொலி மூலம் காண வசதியுள்ள கோவில்களில், அன்று பகல் 12:00 மணி முதல் பகல் 2:30 மணி வரை உச்சி கால பூஜை நடை சாத்தப்பட்டு, பிரகாரம் மற்றும் உள் மண்டபங்களில் கும்பாபிேஷக நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

